புங்குடுதீவில் வாணர் பாலம் போடமுதல் போக்குவரத்து மிகக்கஸ்டமாக இருந்தது.
வாணர் போதி போடப்பட்டபின் வித்துவான் சி.ஆறுமுகம் எழுதிய கவிதை
நிறைமாத கர்ப்பிணியும் வயிறுநொந்து நேரம் தோணியிலே
நின்று கொண்டு இறைவா எம் விதியோதான் இதுவே என்று
ஓங்கிடுவாள். அழுதிடுவாள்.என்லோவாழ்வு.மறையாதோ
தோணிக்குள்ளும் கறைபடிந்த வாழ்விதுவும் கலைந்ததம்மா
கண்ணியஞ்சார்வாணர்வந்து பிறந்ததானே
அருமையான கவிதை 1958 இற்கு முன் தோணியில் பயணம் இந்த நேரத்தில் நாட்டுமருத்துவிச்சிகள் இந்த ஊரில் செய்த சேவை ஆவனப்படுத்தப்படவில்லை.
அந்த வகையில் புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தில் வசித்த திருமதி செல்லப்பா செல்லாச்சி என்பவர் நினைவு கூரத்தக்கவர். 1920 காலப்பகுதியில் இவர் தமது பரம்பரையாக செய்யும் நாட்டுமருத்துவிச்சி பிள்ளைப்பேறு அற்புதமானது. இந்தப்பகுதியில் இவரால் பெறுவிக்காத குழந்தைகள் இல்லை எண்றே கூறலாம்.
சாதாரண டெலிவரி முதல் பிறீச் என்று சொல்லப்படுகின்ற எல்லா குழந்தை பிறப்புகளையும் சாதாரணமாக செய்து முடித்தவர்.
எனது தந்தையார் பிள்ளைப்பேற்றுக்கு பெயர் போனவர் இருந்தும் 1931 ஆம் ஆண்டு அவரை பெறுவித்து வைத்தியநாதன் என்று பெயர் வைக்கச் சொன்னவர். அந்தப்பெயர் வைக்காவிடினும் அந்தப்பெயரை ஊரில் பெற்றவர். எங்கள் ஊரில் மிகப்பிரபல்யமான பிள்ளைப்பேறு முறையை கையாண்டவர்.
வீட்டு மரத்தில் கயிறு கட்டி அதில் சீலையை கட்டி பிள்ளைத்தாச்சியை இரு மண்மூடைகட்டி அதற்கு மேல் உட்கார வைத்து சீலையைத் தாங்கி முக்கி இருந்தவாறு பிள்ளை பெறல். இந்த உட்கார்ந்து பிள்ளை பெறும் முறை அந்தக்காலத்தில் நவீன முறையில் இருந்தது. இறந்த பிள்ளைகளை பெறுவித்தல் எல்லாம் குலதெய்வம் காத்தவராயரை நினைவுகூர்ந்து பெறுவிப்பார் .
ஒரு முறை புங்குடுதீவுக்கு 1942 இற்குப்பின் வைத்தியசாலை வந்த பின் ஒரு மருத்துவிச்சி இவா பெிள்ளை பெறுவித்த சத்தகத்தை கொண்டு போய் டீஎம்ஓ விடம் கொடுத்து அவர் விசாரித்த போது ஐயா நாங்கள் பரம்பரையாக இந்த சத்தகத்தால் தான் பலி பிள்ளை நச்சுக்கொடி வெட்டியிருக்கிறேன் ஒரு முறையும் பிழை வரவில்லை உங்கள் கத்தரிக்கோலால் வெட்டி வலிப்பு வந்திருப்பதை அறிந்திருக்கிறேன் என்று கூறியதை எல்லோரும் ஞாபகபடுத்துவரர்கள். இவர்போல 12ஆம் வட்டாரத்தில் ஆனாசி என்பவரும் பிள்ளை பெறுவிப்பதில் வல்லவர்கள்.
தகவல் Sritharan Ganesh