திரு முருகேசபிள்ளை நேமிநாதன்
சட்டத்தரணி/சமூக சேவகர்/எழுத்தாளர்
புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைச் சேர்ந்த திரு மூத்தவர் இராமர் முருகேசபிள்ளை, திருமதி அலங்காரம்
(ராசம்மா) தம்பதிகளின் 5வது புதல்வர் சட்டத்தரணி திரு நேமிநாதன் அவர்கள். தனது ஆரம்பக்கல்வியை
புங்குடுதீவிலும், உயர் கல்வியை இரத்தினபுரியிலும், சுன்னாகத்திலும் கற்றார்.
அறுபது, எழுபதுகளில் காலஞ்சென்ற புரட்சியாளர் திரு மு தளயசிங்கத்துடன் இணைந்து புங்குடுதீவில்
புரையோடிப்போயிருந்த சாதிப்பிரச்சினையில,; தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக போராட்டங்களை
மேற்கொண்டும், சமூகப்பணிகளைச் செய்தும் வந்தார். இவர்களுடன் இணைந்து எழுத்தாளர் மு
பொன்னம்பலம், கவிஞர் சு வில்வரத்தினம,; சமூக சேவையாளர் வீ பாலசுப்பிரமணியம் போன்றோரும்
மற்றும் புங்குடுதீவு மக்களும் போராட்டங்களை நடாத்தினர்.
திரு நேமிநாதன் அவர்கள் 1973ம் ஆண்டு இலங்கையில் சட்டத்தரணியாக (Proctor) பதவிப்பிரமாணம்
எடுத்து, 1978ம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்திலும், ஊர்காவற்துறையிலும் சட்டத்தரணியாக பணிபுரிந்தார்.
1978ம் ஆண்டு லண்டனுக்கு மேற்படிப்பிற்காக வந்து, சட்டத்தரணியாக பதவியேற்றதிலிருந்து மனித
உரிமைகள், அகதிகள் விவகாரம், இலக்கியம், அரசியல் என தமிழ் சமூகத்திற்கு தனது பங்களிப்பைச்
செய்துகொண்டே இருக்கிறார்.
சிறு கதைகள் எழுதியும், நாடகம் எழுதி நடித்தும் உள்ளார். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள்
போன்றவற்றை ‘தமிழ் ஈழ இலக்கியம்’ எனும் பெயரில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார், ‘தமிழ் அகதி’
எனும் தமிழ்ஃஆங்கில இரு மொழி சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணி புரிந்தார், இலங்கையில் ‘பூரணி’
தமிழ் இலக்கிய காலாண்டிதழின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றிருந்தார், ‘சிதைந்து போன இந்து
ஆலயங்கள்’ என்ற ங}லை ஆங்கிலத்தில் தொகுத்து வழங்கினார். ‘மத்தாப்பு’ என்ற காணொளி
சஞ்சிகையை நண்பர்களுடன் இணைந்து நடாத்தினார். Hendon & Kingsbury தமிழ் பாடசாலைகளின்
செயல்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
இலங்கையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும்
உதவி செய்யும் முகமாக ஆரம்பிக்கப்பட்ட ‘தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர் ஆதரவுக் குழு’ என்ற
அமைப்பை லண்டனில் நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பித்து, அதன் தலைவராக இருந்து பல உதவிகளைச்
செய்திருக்கிறார். இந்த அமைப்பின் மூலம் ‘விசாரணை செய் அல்லது விடுதலை செய்’ என்ற ங}லை
ஆங்கிலத்தில் தொகுத்து வெளியிட்டார்.
அன்றிலிருந்து இன்று வரை புங்குடுதீவு மக்களுக்கும், இரத்தினபுரியில் வாழும் தமிழ் மக்களுக்கும் தனது
வருவாயில் ஒரு பகுதியை செலவு செய்துகொண்டே இருக்கிறார் திரு நேமிநாதன் அவர்கள். குறிப்பாக
கடந்த பல வருடங்களாக திரு வீ பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து சிறுவர்களுக்கான பாடசாலைகளை
ஆரம்பித்து, இலவசக் கல்வி, உணவு, உடை என பலதரப்பட்ட உதவிகளைச் செய்தும், பெண்களுக்கு
தொழில் வாய்ப்பு அளித்தும் வருகிறார்.
[…] http://www.pungudutivu.org/mannin-maintharkal-murukesappillai-neminathan […]