திரு செல்லையா இலகுப்பிள்ளை
ஆசிரியர்


திரு செல்லையா இலகுப்பிள்ளை அவர்கள், புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தில்
திரு, திருமதி செல்லையா -நாகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனாக
30/09/927 ல் எம் மண்ணில் உதயமானார். இவர் 1950 – 1953 ஆண்டு
காலப்பகுதியில் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சியில்
சிறப்புச் சித்தி பெற்றார்.

இவர் தனது ஆசிரியர் பதவியினை, பதுளை புனித சென்பீட்டர்ஸ் கத்தோலிக்க
கல்லூரியில் ஆரம்பித்தார். அக்காலப்பகுதியில் இவர் பதுளை சைவ பரிபாலன
சபையின் உப தலைவராகவும் கடமை ஆற்றினார்.

சமய, சமூக சேவகரான நமது இலகுப்பிள்ளை ஆசிரியர் அவர்கள் 1966 காலப்பகுதியில் புங்குடுதீவு
துரைச்சாமி வித்தியாலய அதிபராகக் கடமை புரிந்தார்.

அத்துடன் பானாவிடை சிவன் கோவில் மற்றும் முத்தலிப்புலம் வீரகத்தி விநாயகர் ஆலயங்களிலும் தனது
சமயப்பணிகளில் பெரும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டார் . இவரது சமயப்பணிகள் புலம் பெயர்ந்து இங்கிலாந்து
வந்த பின்னரும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

நமது இலகுப்பிள்ளை ஆசிரியரிடம் கல்வி பயின்ற பெருமளவிலான மாணவர்கள் ,புலம்பெயர் தேசங்களிலும்,
உள்ளூரிலும் பல துறைகளில் முன்னேறி வருவது, இவரது ஆரம்பக் கல்விக்கு கிடைத்த வெற்றி
என்றால் மிகையாகாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here