ஈழவர்நாட்டின் மணிமுடியாகத் திகழ்வது வடமாகாணம். அம்மணிமுடியில் ஒளிர் வீசும் ஏழு தீவுகளுள் நடுநாயகமானது பொன் கொடு தீவான புங்குடு தீவாகும். அப்புகழ்பூத்த தீவிலே உதித்த கோமகன் “உயரறிவேந்தல்“ அமரர் ஆறுமுகம் பொன்னம்பலம் ஆவார்.

இறப்பதும் வாழ்வதும் பெரிதல்ல! மனிதன் தன்வாழ்நாளில் தான் பிறந்த மண்ணிற்கும் தாய் மண்ணின் மக்களுக்கும் தன்குடும்பம் உறவகளுக்கும் தன்னால் செய்யக்கூடிய சமுதாயத் தொண்டுகள் தேவையறிந்து செய்யும் தேவைகள் இவைகளைக் கொண்டுதான் தமது பிறவிப்பயன்களையும் பெருமைகளையும் பெற்று விடுகிறார்கள்.

நாட்டின்நிலை பயங்கரமிக்கதாக இருந்தும் கூட புங்குடுதீவு மக்களையும் மண்ணையும் விட்டு இவர் விலகிச்செல்ல செல்லவில்லை. தமது கிராம மக்கள் சிந்தனையாளர்களாகவும் சமயப்பற்றாளர்களாகவும் சமூகநலத் தொண்டாற்றுபவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தியவர். மக்கள் நடமாட்டம் அதிகமின்றி மனைகள் பொலிவிழந்திருக்கும் கிராமத்தை ஒளிவீசும் கிராமமாக மாற்ற வேண்டும் எனும் நோக்கில் மண்ணைப் புடம்போட்ட மண்மறவா மனிதராகச் செயல்ப்பட்டவர்.

கிராமத்தின் எக்குறைகளானாலும் காலத்திற்குக்காலம் செயற்படும் அரசியற் கட்சிகளுடனும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகளைப்பெற்று அதனை நிறைவு செய்வதில் புத்திசாதுரியமானவர். ஓவ்வொரு வீட்டிலும் வறுமையும் வெறுமையும் இல்லாதொழிக்க இயன்றவரை முயற்சிசெய்த எம் பெருந்தகை! சொல்லாமலே செய்திடும் செயல்வீரர் ஆவார்.

இவரது திறமைக்கு எடுத்துக்காட்டாக புங்குடுதீவு அரியநாயகன் புலம் ஆலய பரிபாலன சபை புங்குடுதீவு பல.நோக்குக் கூட்டுறவுச்சங்கம் பிரஜைகள் குழு ஆகியவற்றின் தலைவராகவும் தேசவள அபிவிருத்தி ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் செயற்பட்டது சான்றாகும். இதனை நினைந்து பங்குடுதீவு ஐங்கரன் சனசமூக நிலைய நிறுவனர் திரு.துரைகணேசலிங்கம் அவர்களும் செயலதிபர் தீவப்பகுதி முன்னாள் வலயக் கல்விப்பணிப்பாளர் த.தவராசா (அதிபர்) அவர்களும் கூட்டாக புங்குடுதீவு மக்கள்சார்பில் “உயரறிவேந்தல்“ விருதுவழங்கிக் கௌவுரவித்து முருகனாய் மக்களுக்காய் அழைத்த இடமெல்லாம் நின்றிருந்த உனக்கு தைப்பூசம் ஆகிய இன்றைய முருகனின் நன் நாளில் அழகான உன்முகம் பூமிதன் பூவாய் புதைகுழிக்காய் விதைந்திருக்க உயர்திரு.ஆறுமுகம் பொன்னம்பலம் ஆகிய தங்களுக்கு நாம் பெரு மதிப்பு வழங்கி நினைவில் ஏந்தி நிற்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here