புங்குடுதீவையும் வேலணை தீவையும் இணைக்கும் அம்பலவாணர் தாம்போதி

புங்குடுதீவையும் வேலணை தீவையும் இணைக்கும் அம்பலவாணர் தாம்போதி வாணர் சகோதரர்களின் அரிய முயற்சியின் பலனாக இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறது.ஒரு நாட்டின் கிராமங்கள் முன்னேற்றம் அடைவதற்கு அங்குள்ள போக்குவரத்து பாதைகள் வசதியாக அமைந்திருக்க வேண்டும். தீவுப்பகுதிக்கிராமங்களுக்கு தரைப்பாதைகள் மட்டுமின்றி கடற்பாதைகளும் முக்கிய தேவைகளாக அமைகின்றன.யாழ்ப்பாண நகரத்திலிருந்து 20 கிலோ மீற்றர் தூரத்தில் நடுக்கடலில் ~ப| வடிவில் அமைந்திருக்கும் நலப்பரப்புத்தான் புங்குடுதீவு கிராமம்.
யாழ்ப்பாண நகரையும் வேலணைத்தீவையும் இணைக்கும் கடல்மீதான தரைப்பாதை பண்ணை தாம்போதி என்று அழைக்கப்படுகிறது. புங்குடுதீவுக்கும் வேலணை தீவுக்கும் இடையில் பரந்து கிடக்கும் கடலுக்கு மேலாக அமைக்கப்பட்டுள்ள தரைப்பாதை ~~அம்பலவாணர் தாம்போதி|| என்று அழைக்கப்படுகிறது.

புங்குடுதீவில் பிறந்த அம்பலவாணர் என்ற பெரியார் இத்தாம்போதியை அமைத்தமையால் இதற்கு அந்தப்பெயர் வந்ததாகக் கூறப்படுகின்றது.4.8 கிலோமீற்றர் தூரமுள்ள இத்தாம்போதி இலங்கையிலேயே மிகநீண்ட தாம்போதியாகும்.

புங்குடுதீவு மக்கிளன் நீண்டகால முயற்சியின் பின்பே இது அமைக்கப்பட்டது.

ஒரே நேரத்தில் இரண்டு பஸ்கள் எதிரெதிரே கடக்கக்கூடிய அகலமான வீதி.ஐம்பதுக்கு மேற்பட்ட மதகுகளும் ஒரு பெரிய பாலமும் இந்த நீண்ட பாதையில் அமைந்திருக்கின்றன.

கடலின் நடுவே பெரிய பாறாங்கற்கள் நட்டு அதன்மீது மணலும் சீமெந்தும் பூசி தார்இட்டு நீண்டவீதுpயாக இந்த தாம்போதி அமைக்கப்பட்டிருக்கிறது.

புங்குடுதீவின் போக்குவரத்தை தரைப்பாதையினூடாக அமைத்துக்கொடுத்த பெருமை இந்த அம்பலவாணர் தாம்போதிக்கே உரியது.மேற்படி பாதையை அமைப்பதில் முன்னின்று உழைத்த அம்பலவாணர் சகோதரர்களை, புங்குடுதீவு மக்கள் என்று நன்றியுடன் நினைவில் வைத்திருக்கிறார்கள்.

புங்குடுதீவில் பிறந்த சமூக சேவகர்கள்தான் பெரிய வாணரும் சின்னவாணரும். இவர்கள் இருவரும் இளமைக்காலத்திலேயே புங்குடுதீவு மக்கள் போக்குவரத்தில் அனுபவிக்கும் கஷ்டங்களை அனுபவரீதியாக உணர்ந்திருந்தனர்.பெரிய வாணர் படிப்பு முடிந்ததும் தொழில்தேடி மலேசியா சென்றார்.

மலேசியாவில் தீவுகளுக்கிடையே அமைந்துள்ள தாம்போதிகள் போன்று புங்குடுதீவுக்கும் வேலணைக்கும் இடையில் ஒரு பெரியதாம்போதியை அமைக்கவேண்டுமென்று அவர் கனவு கண்டார்.தமது கனவை நனவாக்க பெரிய சாதனைகளை அவர் செய்யவேண்டியிருந்தது.மலேசியாவில் வாழ்ந்த புங்குடுதீவு மக்களை ஒன்று திரட்டி மலாயா – புங்குடுதீவு ஐக்கிய சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி, புங்குடுதீவு மக்களின் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கான வழிவகைகளை ஆராய்ந்தார்.

1918 ஆம் ஆண்டு நாடு திரும்பிய பெரியவாணர் முறைப்படி தாம்போதியை அமைக்கவேண்டுமென புங்குடுதீவிலுள்ள வீடுகள் தோறும் கையொப்பம் வாங்கி அரசுக்கு அனுப்பினார்.

தாம்போதி அமைப்பது சம்பந்தமாக கொழும்பில் அரசபிரநிதிகளைச் சந்திப்பது, பத்திரிகைகளுக்கு அறிக்கைகளைச் சமர்ப்பிப்பது, பத்திரிகைகளுக்கு அறிக்கைகளைச் சமர்ப்பிப்பது, போக்குவரத்து அவலங்களைப் புகைப்படங்கள் மூலம் நாடு முழுவதும் அறியச்செய்வது போன்ற பணிகளில் பெரியவாணர் முழு முயற்சியுடன் ஈடுபட்டார்.

புங்குடுதீவிலுள்ள வீடுகள் தோறும் சென்று கையொப்பங்களை வாங்குவதில் சின்ன வாணரும் அவடன் ஈடுபட்டார்.1922 ஆம் ஆண்டு ~~புங்குடுதீவு மகாஜன சேவாசங்கம்|| என்ற சங்கத்தை ஆரம்பித்த அம்பலவாணர் சகோதரர்கள், பல அங்கத்தவர்களை சேர்த்துக்கெண்டனர். இதற்காக அதனை 1926 ஆம் ஆண்டு ~~அகில இலங்கை மகாஜன சேவா சங்கம்|| என்று பெயர்மாற்றினார்கள்.இந்த அமைப்பினூடாக அரச பிரதிநிதிகள், தேசாதிபதி போன்றோரை அழைத்து வந்து பிரச்சினைகளை எடுத்துக்கூறினர்.

அதன் பலனாக 1935 இல் சட்டநிரூபண சபையில் ~~தாம்போதி|| அமைக்கும் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.சட்டநிரூபண சபையில் அங்கத்தவர்களாக இருந்த கண்டி அங்கத்தவர் பண்டிட் பட்டுவந்து டாவ, தொழிற்சங்கவாதி ஏ.ஈ.குணசிங்க, ஆங்கிலேயப் பிரதிநிதி சேர் வில்லியம் ஆகியோர், தாம்போதி அமைக்க வேண்டும் என்று பல ஆதாரங்களுடன் வாதாடி அனுமதியையும் நிதியையும் பெற்றுக்கொண்டனர்.

வாணர் சகோதரர்கள் கண்ட கனவு நனவாகியது.1935 ஆம் ஆண்டு அம்பலவாணர் தாம்போதி வேலை ஆரம்பமாகியது. பல்வேறு வழிகளில் சமூகப்பணியாற்றிய பெரியவாணர் தீவக மக்களின் வளர்ச்சியை கருத்திற்கொண்டு 1947 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டார். அப்பொழுது அவரால் 3701 வாக்குகளையே பெறமுடிந்தது.

பெரும்பாலும் புங்குடுதீவு மக்களே அவருக்கு வாக்களித்தனர். பொதுத்தேர்தலில் தன்னுடன் போட்டியிட்டு வெற்றி பெற்ற அல்பிரட் தம்பி ஐயாவை அழைத்து தாம்போதி வேலையைப் பூர்த்தி செய்து தருமாறு கேட்டுக்கொண்டார்.

காலூர் எம்.பி.அல்பிரட் தம்பிஐயா 1953 ஆம் ஆண்டு அம்பலவாணர் தாம்போதியை மக்கள் பயன்படுத்தும் வகையில் திறந்து வைத்தார்.அதற்கு முன்பே, அதாவது 1948இலேயே பெரியவாணர் மரணமானார். பெரியவாணர் அமைத்த பிரமாண்டமான தாம்போதி அன்றுமுதல் இன்றுவரை இளமையாகவே காட்சியளிக்கிறது.

எந்தப்போருக்கும் செல்லடிக்கும் குண்டுமழைக்கும் அது அசைந்து கொடுக்கவில்லை. அது அம்பலவாணரின் பெயரைச் சொல்லிக்கொண்டு இன்றும் கம்பீரமாக தலை நிமிர்ந்து நிற்கிறது.

நன்றி:வீரசேரி(4-05-2003)-தம்பிஜயா தேவதாஸ்

——————————————————————————–

வாணர்பால வரலாறு

இலங்கையில் மிக நீளமானது இப்பாலமாகும் இப்பாலத்தின் அவசியம் பற்றி மிக நீண்ட காலமாகவே உணரப்பட்டு வந்துள்ள போதிலும் அதனை முன்னெடுத்துச் செல்வதற்கு எவருமற்ற நிலை இந் நூற்றாண்டின் ஆரம்பம் வரை காணப்பட்டது.

இப்பாலம் அமைக்கப்படுமாயின் தீவுப்பகுதி மக்களில் பெரும்பாலானோர் நன்மை பெற வாய்பிருந்தபோதிலும் புங்குடுதீவு மக்களாலேயே முன்னெடுத்து செல்வது தவிர்க்க முடியாததாக இருந்தது.

புங்குடுதீவு மக்கள் இப்பாலம் அமைக்கப்படாத காலத்தில் பட்ட கஸ்டங்களை வித்துவான் சி.ஆறுமுகம் அவர்கள் கவிதையில் பின்வருமாறு தெரிவிக்கின்றார்.

தோணிகளிற் காலைவைத்து ஏறின் கொஞ்சத் தூரந்தான் மிதக்குமவை! போறுக்கும் சேற்றில் ஆணென்ன பெண்ணென்ன! குழந்தையென்ன அகலாத நோய்பிடித்த கிழந்தானென்ன நாணின்றி ஆடைகளைத் தூக்கி நடுக்கடலில் புதை சேற்றில் நடந்த காட்சி தோணுதையா மனப்படத்தில் துயரம் யாவும் தொலைந்திடுமோ வாணர் வந்து தோன்றாவி;ட்டால்?

நிறை மாதக் கர்ப்பிணியும் வயிறு நொந்தே நெடுநேரம் தோணியிலே நின்று கொண்டு இறiவா எம் விதியேதான் இதுவென்று ஏங்கிடுவாள்! அழுதிடுவாள்! என்னே வாழ்வு! மறையாதோ இக்கொடுமை என்றெண்ணி மகவுதனைப் பெற்றிடுவாள் தோணிக்குள்ளும் கறைபடிந்த வாழ்விதுவும் கலைந்ததம்மா கண்ணியஞ்சார் வாணர் வந்து பிறந்ததாலே!

என்ற கவிதையிலிருந்து மக்கள் அனுபவித்த கஸ்டங்கள் தெளிவாகின்றது. 1890 ஆம் ஆண்டு திரு. க. அம்பலவாணரும் பெரியவாணர் 1893ம் ஆண்டு திரு. க. அம்பலவாணரும் சின்னவாணர் புங்குடுதீவில் பிறந்தனர்.

பேரியவாணர் புங்குடுதீவு அமெரிக்கமிஷன் பாடசாலை, கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றவர். அக்காலங்களில் புங்குடுதீவு மக்கள் போக்குவரத்தில் பட்ட கஸ்டங்கள் அனுபவரீதியாக உணர்ந்தவர். திரு. க. அம்பலவாணர் தனது பாடசாலைக் கல்வியை பூர்த்தி செய்த பின்னர் தொழில் தேடும் பொருட்டு மலாயா சென்றார்.

மலேசியாவில் தான் கண்ட அனுபவங்களைத் தமது சொந்த ஊரக்கு கிடைக்கச் செய்ய வேண்டுமெனப் பேரவாக் கொண்டிருந்தார். குறிப்பாக அங்கு காணப்படும் தாம் போதிகளைப் போல புங்குடுதீவுக்கும் – வேலணைக்கும் இடையில் அமைக்கப்படுதல் அவசியம் என்பதை உணர்ந்தார். இதனை செயல்படுத்த மலாயாவிலுள்ள புங்குடுதீவு மக்களை ஒன்று திரட்டி மலாயா -புங்குடுதீவு ஐக்கிய சங்கம் என்ற அமைப்பினை உருவாக்கி புங்குடுதீவு மக்களின் வளர்ச்சிக்கான உபாயங்களைக் கண்டறிந்தார்.

1918ஆம் ஆண்டில் புங்குடுதீவு திரும்பிய பெரியவாணர் முறைப்படி பாலத்தை அமைக்க வேண்டுமென வீடுகள் தோறும் கையொப்பங்களை வாங்கி அரசுக்கு சமர்ப்பித்துவிட்டு மலாயா சென்றார். அரசு இதில் எவ்வித கவனமும் செலுத்தவில்லை. மலாயாவில் இயங்கி வந்த மலாயா – புங்குடுதீவு ஐக்கிய சங்கத்தை பலப்படுத்தி பாலம் அமைக்கப்படல் வேண்டும் என்பதில் அக்கறை கொண்டு நாடு திரும்பினார்.

1924, 1926, 1930, 1934, ஆம் ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான கையொப்பங்கள் வாங்கப்பட்டு மீண்டும் மீண்டும் அரசினை வற்புறுத்தத் தொடங்கினார். புங்குடுதீவில் கையொப்பங்கள் சேர்ப்பதில் சின்னவாணர் செயற்பட கொழும்பில் அரச பிரதிநிதிகளுடன் சந்திப்புக்கள்.

பத்திரிகையாளர்களுக்கு குரல் கொடுத்தல், போக்குவரத்து அவலத்தை புகைப்படங்கள் மூலம் நாடு முழவதற்கும் அறியச் செய்தல் போன்றவற்றை பெரியவாணர் செய்து வந்தார்.

1922ஆம் ஆண்டில் புங்குடுதீவு மகாஜன சேவா சங்கத்தை ஆரம்பித்து வாணர் சகோதரர்கள் 1926இல் அகில இலங்கை மகாஜள சங்கமாக மாற்றி தீவுப்பகுதியினை குறிப்பாக புங்குடுதீவின் அவல நிலையைநாடறியச் செய்தனர். இவ்வமைப்பினுடாக அரச பிரதிநிதிகள், தேசாதிபதிகள் ஆகியோரை அழைத்து வந்து பிரச்சினைகளை அவர்களுக்கு எடுத்து கூறினார்கள்.

பாலம் அமைப்பது சம்பந்தமாக சட்ட நிரூபண சபை அங்கத்தவர்களுக்கு எடுத்துக் கூறுவதில் பெரியவாணர் தவறவில்லை. இதன் விளைவாக 1925ஆம் ஆண்டு சட்ட நிரூபண சபையில் பாலம் அமைப்பு பிரேரணை விவாதத்திற்கு வந்தது. அப்போது சின்னவாணர் எண்பதுக்கு மேற்பட்ட தந்திகளை தேசாதிபதிக்கு பல்வேறு நிறுவனங்களினூடாக அனுப்பியிருந்தார்.

புங்குடுதீவு-வேலணைப் பாலம் அமைக்கப்படல் வேண்டுமென்பதில் சட்ட நிரூபண சபையில் அங்கத்தவர்களாக இருந்த கண்டி மாவட்ட பிரதிநிதி திரு. பண்டிற்பட்டுவந்துடாவை ஆங்கிலேயப் பிரதிநிதி சேர் வில்லியம்ஸ், திரு. ஏ. ஈ. குணசிங்கா ஆகியோர் பல்வேறு ஆதாரங்களுடன் வாதாடி இறுதியாக அனுமதியையும், நிதியையும் பெற்று விட்டனர்.

இவ் அனுமதி பெறுவதற்கு உழைத்தவர் பெரியவாணர் என்றால் அது மிகையாகாது. 1935ம் ஆண்டு பால வேலை ஆரம்பமாகியது. சின்னவாணரே பால வேலையை முன்னின்று செய்தார். இவை மட்டுமல்லாது கல்வி வளர்ச்சி, தபாற் கந்தோர், தொலைபேசி வசதி போன்ற பல்வேறு வளர்ச்சியில் பெரிதும் அக்கறை கொண்டு உழைத்தவர் பெரியவாணர்.

இவ்வாறாகப் பல்வேறு வழிகளில் சமூகப்பணி செய்த திரு. க. அம்பலவாணர் தீவக வளர்ச்சியை கருத்திற் கொண்டு 1947ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டார். மக்கள் அவரது சேவையைக் கருத்திற் கொள்ளாது தோல்வியுறச் செய்தனர். பேரியவாணர் மனித நேயம் படைத்தவர். பொதுத் தேர்தலில் தன்னுடன் போட்டியிட்டு வெற்றியீட்டிய திரு.

அல்பிரட் தம்பிஐயாவை அழைத்து பாராட்டி உபசாரம் செய்து புங்குடுதீவு மக்களின் அவல நிலையைப் போக்குமாறு கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகொளை ஏற்று திரு. அல்பிரட் தம்பிஐயா அயராது உழைத்து 1953 ஆம் ஆண்டு பாலத்தினை மக்கள் பயன் பாட்டுக்கு திறந்து வைத்தார்.
பெரியவாணர் அவர்கள் 30 ஆண்டுகள் தன்னலம் பாராது உழைத்து உடல் இளைத்து 1948ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இயற்கை எய்தினார். அவர் நம்மிடையே இல்லையாயினும் அவரது பெயரைக் கொண்டு விளங்கும் வாணர் பாலம் இருக்கும் வரை அவரது பெயரும் தொடர்ச்சியாக துலங்கி வரும்.

வாணர் சகோதரர்கள் எம் கிராமத்துக்காக எவ்வளவோ கஸ்டங்களுக்கு மத்தியில் இப்பணியை நிறைவேற்றினார்கள் என்பது சொல்லத் தேவையில்லை. ஆனால் நாம் அவர் விட்டுச் சென்ற பணியை செவ்வனே செய்து முடித்துள்ளோமா என்றால் இல்லை என்பதே மகா உண்மையாகும்.

அன்று மலாயாவில் எண்ணிக்கையில் குறைந்தளவு வாழ்ந்த புங்குடுதீவு மக்களை ஒன்று திரட்டி இப்பாலத்தை அமைத்தார். ஆனால் இன்று பல ஆயிரம் பேர் வெளிநாடுகளில் வாழ்ந்தும் எம் கிராமத்தின் வளர்ச்சிக்காக என்ன செய்தீர்கள்? நாட்டுப் பிரச்சினையைச் சாட்டாக சொல்லி உங்களை நீங்களே சமாதானப்படுத்திக் கொண்டுடிருக்கிறீர்கள்.

இதில் ஒரளவு உண்மை இருக்கிறதுதான். ஆனால் எமது கிராமத்தை எதிர் காலத்தில் அபிவிருத்தி செய்ய இப்பொழுதிருந்தே ஆய்வுகளை, திட்டங்களை மேற்கொள்ள முடியும். இதனை நான் எனது காலத்திலேயே செய்து முடிக்க விரும்புகிறேன். புங்குடுதீவை மட்டுமல்லாது தீவுப்பகுதி முழவதுக்குமான ஆய்வுகளை செய்து நூல்களை வெளியிட விரும்புகிறேன்.

இதுபற்றி ஏற்கனவே பல கட்டுரைகளை வெளியிட்டாலும் முழுமையாக நூலாக வெளியிடப்படவில்லை. இந்த எனது பணிக்கு நீங்கள் ஒவ்வொருவரும் உதவி புரிந்து எம் தீவகத்தினை வளம் கொழிக்கும் )மியாக மாற்ற உதவுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன

இக்கட்டுரை கலாநிதி கார்த்திகேசு குகபாலன் அவர்களால் எழுதிய தீவகம் – வளமும் வாழ்வும் என்ற நூலில் இருந்து திரு. சு. கோகிலதாசன் அவர்களால் தொகுக்கப்பட்டது