Wednesday, March 25, 2026

புங்குடுதீவு மேற்கு அரியநாயகன்புலம் ஶ்ரீ வீரகத்தி விநாயகர்
Pungudutivu Veerakathi Vinayagar

முகவரி / Address: Pungudutivu North West, Kurichchikadu, Sri Lanka
Telephone: +
Website: 
ஆலய பிரதம குரு: 

இக் கோவில் 300 ஆண்டுப் பழைமையானது. தொடக்கத்தில் ஆலமர அடியில் வழிபாடு நடைபெற்றது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஓலையால் வேயப்பட்ட சிறு கொட்டிலில் கோவில் அமைந்தது. வழிபாடு செய்தவர்களில் செட்டி உலகன் என்பவரும் ஒருவர்.

இவர் வாழ்விடம் செட்டிவளவு எனப்பட்டது. சிவபூசைக்கான கிணறும் ஒன்று இருந்துள்ளது.

20 ஆம் நூற்றாண்டில் கோயில் அமைக்கப்பெற்றுக் கும்பாவிஷேகமும் நடைபெற்றது. இந்தியாவிலிருந்து விநாயகர் விக்கிரகம் கொணரப்பட்டுப் பிரதிட்டை செய்யப்பட்டது. 1973 ல் நடைபெற்ற கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடைபெற்றது.

ஆண்டுதோறும் தைப்பூச நாளினைத் தீர்த்தத் திருவிழாவாகக் கொண்டு கொடியேற்றத்திருவிழா தொடங்கப்பட்டது. தீர்த்த உற்சவம் கழுதைப்பிட்டித்துறை முகத்தில் நடைபெறும். 1986 ல் சித்திரத்தேர் செய்யப்பட்டது.

Pungudutivu Veerakathi Vinayagar Thiruvila 2026: Day-by-Day Festival Updates

புங்குடுதீவு இருப்பிட்டி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய மகோற்சவம் 2026 - நாளாந்த திருவிழா விபரங்கள் 🚩 1ம் நாள்: கொடியேற்றத் திருவிழா (23.01.2026) தலைப்பு: அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம்:...

புங்குடுதீவு மேற்கு அரியநாயகன்புலம் ஶ்ரீ வீரகத்தி விநாயகர் தேவஸ்தானம் – புதிய மஞ்ச வெள்ளோட்ட விழா!

புங்குடுதீவு மேற்கு அரியநாயகன்புலம் ஶ்ரீ வீரகத்தி விநாயகர் தேவஸ்தானத்தில், எதிர்வரும் 29.01.2026 வியாழக்கிழமை அன்று நடைபெறவுள்ள 7ம் திருவிழாவும், அம்பாள் குடிகொள்ளும் புதிய சித்திர வேலைப்பாடுகள் அமைந்த "புதிய மஞ்ச வெள்ளோட்ட விழாவும்"...