சின்ன நல்லூர் என்று செல்லமாக அழைக்கப்படும் புங்குடுதீவு மடத்துவெளி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவில் ஆரம்ப காலத்தில் நாச்சிமார் கோவில் என்றே அழைக்கப்பட்டது.
புங்குடுதீவினுள் நுழைந்ததும் முதலில் வரும் கிராமம் மடத்துவெளி. இக்கிராமத்தினுள் நுழைந்ததும் பிரதான வீதியின் வலது புறம் நெடுகிலும் பச்சைப் பசேலென்ற நெல் வயல்களின் நடுவே கிழக்கு நோக்கி சிங்காரமாய் கோலோச்சும் முருகப்பெருமானின் அழகுமிகு திருத்தலம் காட்சியளிக்கும் .கம்பீரமாய் எழுந்து நிற்கும் சிற்பத் தேர் முட்டியின் பின்னே பனங்கூடலின் பின்னணியில் அருள் புரியும் பாலசுப்பிர மணியர் எழுந்தருளி இருக்கிறார் .
இளந்தாரி நாச்சிமார் கோவில் என்ற தொன்மை பெயரை கொண்ட இவ்வாலயம் சுமார் நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும் . நானூறு ஆண்டுகளுக்கு முன்னே வள்ளி நாச்சியார் அயல் கிராமத்தில் இருந்து மடத்துவெளி கிராமத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்தார் .மணமகளான நாச்சியார் மணமகன் வீட்டில் மூன்று நாள் தங்கி வழமைப்படி இருந்தார்