புங்குடுதீவு 11ஆம் வட்டாரத்தின் கிழக்கு எல்லைக் குடியிருப்புக்களின் முடிவை அண்டிய பகுதியில் பரந்து விரிந்த வயல்வெளியையும் பெரிய கிராய்க்குளத்தையும் பார்த்தபடி கிழக்கு நோக்கி அமைந்த அழகிய சிறிய ஆலயமே தெங்கந்திடல் வீரகத்தி விநாயகர் ஆலயமாகும்.
தென்னை மரங்கள் ஆலயச் சூழலில் மிகுந்து காணப்படுவதால் தெங்கந்திடல் விநாயகர் என்ற காரணப்பெயர் அமையப்பெற்றது.