இது அன்னை திரேசா காப்பகம். முதியவர்கள் தங்கியிருந்த உருவாக்க புங்குடுதீவில் உருவாக்கப்பட்டது.

பல குறைகள் காணப்படினும் குறைகூறுவதை நிறுத்தி நிறைவு படுத்தி ஒழுங்கமைக்க வேண்டியது தாய்மண்ணில் பிறந்தவர்களின் கடமை. எமது மண்ணில் பிறந்த எவரும் இறுதிக்காலத்தில் மண்ணிலே வாழ்ந்து மண்ணிலே சாக ஆசையிருக்கும் அதற்கு ஏற்ற மாதிரி வடிவமைக்க வேண்டும்.
இந்த வீடு எஸ்கே மகேந்திரன் சட்டத்தரணி அவர்களின் வீடு என நினைக்கிறேன். இந்த வீட்டுக்கு பக்கத்தால் வல்லனுக்கு போகும் றோட் இருக்கிறது. அந்தப்பிரதேசத்தில் ஒரு வாத்தியார் இருந்தார் அவர் பெயர் ஞாபகமில்லை. எல்லோரும் அவரை செவிட்டு வாத்தியார் என்று அழைப்பர் தயவு செய்து இந்தப்செல்லப்பெயரை வழங்குவதற்கு மன்னிக்கவும். அவரும் மக்கள் மனதில் நிறைந்திருக்கும் ஒரு பெருமகன் இவர் இந்த வல்லன்றோட்டு, வல்லன் சனசமூகநிலையம், சின்னக்கிராய், வல்லன் நெசவு நிலையம் என்பன உருவாதற்கு தன் ஆசிரியத்தொழிலின் நிமித்தம் பிரதேசசபை அங்கத்தவர் பதவிஏற்று செயற்படுத்தியவர்.

1976 என நினைக்கிறேன் வல்லன் ஊடாக பஸ் சேவை ஆரம்பித்தார்கள் அப்போது
மாசில்லாத இ.போசா வல்லனோடு எங்கள் வாரீர்வாரீர் வல்லன் எனும்சாலை என்ற எங்கள் வல்லன் அக்காமாா் பாடியது எனக்கு இப்பவும் ஞாபகமிருக்குது.

தகவல் Sritharan Ganesh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.